![]() |
![]() |
||
|
இல்லம் | உரு | தொழில்நுட்பம் | விவரம் |
|
|
|
|
"எதிரொலி" ஒரு ஊர்தி அமைப்பு, மற்றும் கையில் அடக்கக்கூடிய அமைப்பு உள்ள மருத்துவ
டாப்லர் கருவி. இக் கருவி உயர்தர நுண்ணொலி பிம்பங்களை நேரடியாக்க காட்டும் ஆற்றல்
பெற்றது. இது B, B/M, கூரலை மற்றும் வர்ண டாப்லர் தரத்தில் நுண்ணியமாக உருக்களைக்
காட்டும். நுண்ணொலி வருடி மனிதனுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் உதவும் உன்னதமான ஒரு படைப்பு. அது கத்தியின்றி ரத்தமின்றி அவசரத்திலும் நிதானத்திலும் நோயைக் கண்டறிய மருத்துவருக்கு உதவும் ஒரு மென்மையானப் பொருள். நுன்னொலி வருடி இரண்டு வகையில் உபயொகிக்கப்படுகிறது.
இவ்விரண்டு கட்டங்களிளும் உபயோகிக்ககூடிய ஒரு கருவியின் அவசியத்தை சுரபி அறிந்ததால் உருவான முயற்சியே "எதிரொலி". |
|
எதிரொலியை “கருவி
ஒன்று செயல் இரண்டு” என்று சுருக்கமாகக் கூறலாம். "எதிரொலி" சக்கரம் பொருத்திய
ஒரு முழுமையான வருடியாகவும் உபயயோகித்துக் கொல்லாம்; ஒரு கைப்பையில் அடக்கி தேவைப்பட்ட
இடத்திற்கும் எடுத்தும் செல்லலாம். எப்படி முடிகிறது என்றால், ஒரு முழு நுன்னொலி
வருடியின் திறனை ஒரு சிறிய புத்தகத்தின் அளவிலான ஒரு பெட்டியில் பொருத்தியதால்
இது சாத்தியமாகிறது. |
|
இந்த சிறு பெட்டி ஒரு மடிக்கணினியுடன் இணைக்கப்பட்டு கையில் ஏந்தியும் செல்லலாம்.
அல்லது ஒரு வண்டியில் பொருத்தி ஒரு முழுமையான வருடியாகவும் உபயோகித்துக் கொள்ளலாம். கையில் ஏந்தி சென்றாலும் சரி, வண்டியில் பொருத்திச் சென்றாலும் சரி, இரண்டும் ஒரே சாயலில் ஆன மென்பொருள் (மாதிரியை இங்கு காண்க), ஒரே வடிவம் கொண்ட விசைப்பலகை போன்றவற்றைப் பெற்றிருக்கும். இதனால் குழப்பமும் நேர வாய்ப்பு இராது, பழகவும் சுலபமாக இருக்கும். மேலும் ஒரு கருவியிலிருந்து மற்றக் கருவிக்கு சோதித்தக் குறிப்பை பகிர்ந்துக்கொள்ள மிகவும் எளிதாக இருக்கும். இவை மட்டும் இன்றி மடிக்கணினியை சோதனை செய்யாத நேரத்தில் ஒரு அன்றாடக் கணினியாகவும் பயன் படுத்திக்கொள்ளலாம். ஆதலால் ஒவ்வொரு வருடியுடனும் ஒரு மடிக்கணினி இலவசம் என்று வர்ணிப்பதில் மிகை ஏதும் இல்லை. |
|
Copyright
© 2005 Surabi Biotech, Creative Copyright © 2005 AnuSiSoft,
Tel: +91-422-2270484 |